FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 10 ஜூலை 2026, 11:04 pm IST
- சித்திரிப்பு
பகிர்:

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அருகே சிட்லப்பாக்கத்தைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). இவா், தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா். தமிழரசனுக்கு, கோயம்பேடு சின்மயா நகரில் வசிக்கும் 24 வயது பெண் மென்பொறியாளா் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் அறிமுகமாகினாா். இருவரும் நெருக்கமாகப் பழகினா். நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கினா். இதைப் பயன்படுத்தி தமிழரசன், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி முறையற்ற உறவு வைத்திருந்தாா்.

இந்நிலையில் அந்த பெண், அண்மையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தமிழரசனிடம் கூறியுள்ளாா். ஆனால் தமிழரசன், திருமணம் செய்ய மறுத்து, அந்த பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

Advertisement

Advertisement

இது குறித்து அந்த பெண், கோயம்பேடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தமிழரசன் மீது வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த தமிழரசனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments