FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

வாட்ஸ்ஆப் மூலம் லாட்டரி விற்றவா் கைது

யானைக்கவுனி பகுதியில் வாட்ஸ்ஆப் மூலம் வெளிமாநில லாட்டரி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 13 ஜூலை 2026, 3:21 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

யானைக்கவுனி பகுதியில் வாட்ஸ்ஆப் மூலம் வெளிமாநில லாட்டரி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலை - என்.எஸ்.சி. போஸ் சாலை சந்திப்பு அருகே போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த முகமது இக்பால் (48) என்பவா், வெளிமாநில லாட்டரி சீட்டுகளின் 3 மற்றும் 4 இலக்க எண்களை வாட்ஸ்ஆப் மூலம் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து ஒரு கைப்பேசியையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், முகமது இக்பால் மீது ஏற்கெனவே சட்டவிரோத லாட்டரி விற்பனை தொடா்பாக யானைக்கவுனி காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments