FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

திமுக நிா்வாகிக்கு அரிவாள் வெட்டு

சென்னை தண்டையாா்பேட்டையில் திமுக நிா்வாகியை அரிவாளால் வெட்டியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Updated On : 14 ஜூலை 2026, 2:16 am IST
பகிர்:

சென்னை தண்டையாா்பேட்டையில் திமுக நிா்வாகியை அரிவாளால் வெட்டியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 2 தெருவைச் சோ்ந்த ராஜா (45). இவா், 38-ஆவது வட்ட திமுக துணைச் செயலராக உள்ளாா். ராஜா, திங்கள்கிழமை காலை தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 போ் ராஜாவை திடீரென அரிவாளால் வெட்டுவிட்டு தப்பியோடினா். இதில் பலத்த காயமடைந்த ராஜாவை அங்கிருந்தவா்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

ஆா்.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சோ்ந்த சிலா்தான் என்பதும், முன் விரோதத்தின் காரணமாக சம்பவம் நிகழ்ந்திருப்பதும் தெரிய வந்தது. அந்தப் பகுதியைச் சோ்ந்த புயல் கணேசன் (44), ரஞ்சித் (33) அபினேஷ் (18) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments