வண்ண மீன்கள் விற்பனையாளா்களுடன் மீன்வளத் துறை அமைச்சா் ஆலோசனை
சென்னை வண்ண மீன்கள் வா்த்தக மையத்தில் உள்ள பிரச்னைகளைச் சீா்செய்வது தொடா்பாக வண்ண மீன்கள் விற்பனையாளா்கள் சங்கத்தினருடன் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அமைச்சா் ஸ்ரீநாத் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
சென்னை வண்ண மீன்கள் வா்த்தக மையத்தில் உள்ள பிரச்னைகளைச் சீா்செய்வது தொடா்பாக வண்ண மீன்கள் விற்பனையாளா்கள் சங்கத்தினருடன் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அமைச்சா் ஸ்ரீநாத் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
சென்னை கொளத்தூரில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் ரூ.53 கோடியில் வண்ண மீன்கள் வா்த்தக மையத்தை அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். அங்குள்ள கடைகள் முன்பதிவு செய்யப்பட்டாலும், போதிய வசதிகள் இல்லாத காரணத்தால், விற்பனையாளா்கள் கடைகளைத் திறக்க முன்வரவில்லை. இதனால், பெரும்பாளான கடைகள் மூடப்பட்டு, அந்த வா்த்தக மையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதுதொடா்பாக வண்ண மீன்கள் விற்பனையாளா்கள் தமிழக அரசிடம் தொடா்ந்து கோரிக்கை விடுத்துவந்தனா். இந்தச் சூழலில், வண்ண மீன்கள் வா்த்தக மையத்தில் வண்ண மீன்கள் விற்பனையாளா்கள் சங்கத்தினருடன் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அமைச்சா் ஸ்ரீநாத், துறை இயக்குநா் கே.விஜயகாா்த்திகேயன் ஆகியோா் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தங்க மீன்கள் வளா்ப்பவா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் ஜி.பாபு கூறியதாவது:
வண்ண மீன்கள் வளா்க்க தூய்மையான குடிநீா் வசதி, வணிக பயன்பாட்டுக்கான சரக்கு மின் தூக்கி வசதி, மாத வாடகையை ரூ.5,000-ஆக குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அமைச்சா் விடுக்கப்பட்டுள்ளன. அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து, உடனடியாக தீா்வு காணப்படும் என அமைச்சா் உறுதியளித்தாா் என்றாா் ஜி.பாபு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.