மறுசீரமைக்கப்பட்ட பூங்கா ரயில் நிலையம் நாளை திறப்பு
அம்ரூத் திட்டத்தில் சென்னை பூங்கா ரயில் நிலையம் ரூ.14.79 கோடியில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தை வெள்ளிக்கிழமை (ஜூலை 17) காணொலி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
அம்ரூத் திட்டத்தில் சென்னை பூங்கா ரயில் நிலையம் ரூ.14.79 கோடியில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தை வெள்ளிக்கிழமை (ஜூலை 17) காணொலி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
அம்ரூத் திட்டத்தில் நாடெங்கும் 261 ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, இத்திட்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட 75 ரயில் நிலையங்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) திறந்துவைக்கப்பட உள்ளன. சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் உள்ள பூங்கா ரயில் நிலையம் கடந்த 1928 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1931- ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அந்த ரயில் நிலையம் தற்போது அம்ரூத் திட்டத்தில் ரூ.14.79 கோடியில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
புதிய நுழைவாயில், முகப்பு மேற்கூரையுடன் கூடிய கோபுர அமைப்பு, நவீன தகவல் பலகைகள், காத்திருப்பு வசதிகளுடன் கூடிய புதிய பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம், சீரமைக்கப்பட்ட நடைமேடைகள், புதிய லிஃப்-கள் என பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சீரமைக்கப்பட்ட ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறாா் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.