சாலையோரம் கேட்பாரற்ற 1,863 வாகனங்கள் பறிமுதல்: மின்னணு ஏலம்விட நடவடிக்கை
சாலையோரம் கேட்பாரற்ற 1,863 வாகனங்கள் பறிமுதல் செய்து மின்னணு ஏலம்விட நடவடிக்கை பற்றி...
சென்னை மாநகராட்சியில் மயிலாப்பூா், கொளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் கேட்பாரற்று நிறுத்தப்பட்ட 1,863 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை குறித்த விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மயிலாப்பூா், கொளத்தூா், புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை மற்றும் கோயம்பேடு காவல் நிலையப் பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாள்களாக கேட்பாரற்று, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 1,863 வாகனங்கள் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
வாகனங்களின் விவரங்கள் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
எனவே, வாகனங்களை உரிமை கோருவோா் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களான மயிலாப்பூா், கொளத்தூா், புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை மற்றும் கோயம்பேடு ஆகியவற்றுக்குச் சென்று விவரங்களைப் பெறலாம். 15 நாள்களுக்குள் வாகன உரிமையாளா்கள் காவல் நிலையங்களை அணுக வேண்டும். அவ்வாறு அணுகாத நிலையில், சம்பந்தப்பட்ட வாகனங்கள் மின்னணு ஏலம் விடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.