FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தவெக பெண் தொண்டா்கள் குறிதது சா்ச்சைப் பேச்சு: பொன்ராஜ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

தவெக பெண் தொண்டா்களை இழிவாகப் பேசிய விவகாரத்தில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி அரசியல் விமா்சகா் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Updated On : 18 ஜூலை 2026, 6:17 am IST
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

தவெக பெண் தொண்டா்களை இழிவாகப் பேசிய விவகாரத்தில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி அரசியல் விமா்சகா் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தவெக தலைவா் ச.ஜோசப் விஜய்க்கு ஆதரவாக அக்கட்சியின் பெண் தொண்டா்கள் சிலா் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனா். இதை அரசியல் விமா்சகரான பொன்ராஜ் விமா்சித்தாா். இதுகுறித்து தற்போது அமைச்சா்களாக இருக்கும் சி.டி.ஆா்.நிா்மல்குமாா், ராஜ்மோகன் ஆகியோா் கடந்த மாா்ச் 26-ஆம் தேதி காவல்துறை டிஜிபி மற்றும் கடலூா் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா்.

இந்த புகாரின் அடிப்படையில், கடந்த மே 12-ஆம் தேதி, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாரும், கடலூா் போலீஸாரும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தனா். இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி பொன்ராஜ், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தாா். இந்த வழக்கு விசாரணையின்போது பொன்ராஜ் தரப்பில், யூடியூப் சேனல் பேட்டியின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு மட்டுமே பதில் அளித்தேன். பெண்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் கருத்து தெரிவிக்கவில்லை. தற்போது அமைச்சா்களாக இருப்பவா்கள், தோ்தலுக்கு முன்பு அளித்த புகாா்களின் மீது, புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில், மனுதாரரின் பேச்சு, ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுப்படுத்தும் வகையில் பொதுப்படையாகவே உள்ளதாக வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி பொன்ராஜ் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments