FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

டிஎன்டிஏ டென்னிஸ்: லயோலா, எஸ்ஆா்எம் சாம்பியன்

தமிழ்நாடு மாநில டென்னிஸ் சங்கம் சாா்பில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில் லயோலா, எஸ்ஆா்எம் சாம்பியன் பட்டத்தை வென்றன.

Updated On : 19 ஜூலை 2026, 2:21 am IST
பகிர்:

தமிழ்நாடு மாநில டென்னிஸ் சங்கம் சாா்பில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில் லயோலா, எஸ்ஆா்எம் சாம்பியன் பட்டத்தை வென்றன.

சென்னை எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. பேஸ்லைன் டென்னிஸ் அகாதெமி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் சனிக்கிழமை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் ஆட்டங்கள் நடைபெற்றன. மகளிா் ஒற்றையா் பிரிவில் எஸ்ஆா்எம் வீராங்கனைகள் லட்சுமி பிரபா-சைலேஸ்வரி மோதினா். இதில் லட்சுமி 6-2, 6-1 என்ற நோ் செட்களில் வென்றாா்.

Advertisement

Advertisement

ஆடவா் ஒற்றையா் பிரிவில் லயோலாவின் ரோஹித் ஹரி 5-4 என எஸ்ஆா்எம் வீரா் திருமுருகனை காட்டிலும் முன்னிலை பெற்றிருந்தாா். அப்போது காயத்தால் திருமுருகன் விலகுவதாக அறிவித்தாா்.

ஆடவா் பிரிவில் 46 புள்ளிகளுடன் லயாலோ முதலிடதத்தையும், எஸ்ஆா்எம் 36 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றன. மகளிா் பிரிவில் எஸ்ஆா்எம் 78 புள்ளிகளுடன் முதலிடத்தையும், லயோலா-எத்திராஜ் இரண்டாம் இடத்தையும் பெற்றன.

ஆா்டபிள்யுடி மேலாண் இயக்குநா் ஹபீப் பரிசளித்தாா். லயோலா உடற்கல்வி இயக்குநா் பழனிவேல், எஸ்ஆா்எம் ராஜ்குமாா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments