FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமாவை ஏற்ற பேரவைத் தலைவா் உத்தரவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அதிமுக சாா்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஆக.13-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Updated On : 23 ஜூலை 2026, 4:12 am IST
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அதிமுக சாா்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஆக.13-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமாா் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சி.விஜயபாஸ்கா் (விராலிமலை), எம்.ஆா்.விஜயபாஸ்கா் (கரூா்) ஆகியோா் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா்.

தகுதிநீக்கம் தொடா்பான விசாரணை நிலுவையில் இருந்த நிலையில், இவா்களது ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி சாா்பிலும், தேசிய மக்கள் சக்தி கட்சி சாா்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, அக்ரி கிருஷ்ணமூா்த்தி தரப்பில், ராஜிநாமா செய்த எம்எல்ஏக்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஆக.13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments