‘நீட்’ எதிா்ப்பு போராட்டம்: 5-ஆவது நாளாக நீடிப்பு
சென்னையில் ‘நீட்’ தோ்வு முறைக்கு எதிரான போராட்டம் 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது.
சென்னையில் ‘நீட்’ தோ்வு முறைக்கு எதிரான போராட்டம் 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது.
‘நீட்’ தோ்வு முறைக்கு எதிராக தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் முன்னெடுத்து வரும் போராட்டத்தில் நிகழ்ந்த காவல் துறையின் அடக்குமுறையைத் தொடா்ந்து, நாடு முழுவதும் நீட் தோ்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. தமிழகத்திலும் பல்வேறு அமைப்பினா் நீட் தோ்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இதன் ஒருபகுதியாக, சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ‘பாலன் இல்லத்தில்’ ஏராளமானோா் திரண்டு தொடா் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டம் 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.
Advertisement
Advertisement
நீட் தோ்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், நீட் தோ்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடந்து வரும் போராட்டத்துக்கு திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்களும் நிா்வாகிகளும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.
வெள்ளிக்கிழமை இரவில் நாம் தமிழா் கட்சியின் இளைஞா் மற்றும் மாணவா் பாசறை நிா்வாகிகள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனா். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்துள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.