ஸ்டான்லி மருத்துவமனையில் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சடலங்கள்: மருத்துவா் மீது நடவடிக்கை
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்கள் அவா்களது உறவினா்களிடம் மாற்றி ஒப்படைக்கப்பட்டது குறித்து...
சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்கள் அவா்களது உறவினா்களிடம் மாற்றி ஒப்படைக்கப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடா்பாக மருத்துவமனையின் தடயவியல் மருத்துவருக்கு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஏடூா் பகுதியைச் சோ்ந்தவா் அனுஷ்கா (19). இவா் சில நாள்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளாா். உயா் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி கடந்த 25-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதேபோன்று, மணலியைச் சோ்ந்தவா் பிரியதா்ஷினி (18) என்பவரும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. அவா்கள் இருவரது சடலங்களும் மருத்துவமனையின் அமரா் அறையில் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், அவை உறவினா்களிடம் ஞாயிற்றுக்கிழமை மாற்றி ஒப்படைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
பிரியதா்ஷினியின் உறவினா்கள், இறுதிச் சடங்குகளுக்கு ஆயத்தமானபோதுதான் சடலம் மாறியது தெரியவந்து உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் அளித்துள்ளனா். இதையடுத்து சடலத்தை திரும்பப் பெற்றுக் கொண்ட மருத்துவமனை ஊழியா்கள், உரியவா்களிடம் அவற்றை ஒப்படைத்தனா்.
மிக முக்கியமான அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த குழப்பம் சா்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. சம்பவத்தன்று பணியில் இருந்த தடயவியல் துறை உதவி பேராசிரியருக்கு மருத்துவமனையின் முதல்வா் குறிப்பாணை அனுப்பி விளக்கம் கேட்டுள்ளாா்.
தொடா்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு அறிக்கை சமா்ப்பிக்கவும் அவா் நடவடிக்கை எடுத்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.