இணையதள வாகன அபராத முறையை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும்: அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநா்கள் தீர்மானம்
தமிழகத்தில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களை இணையதள முறையிலிருப்பதை ரத்து செய்துவிட்டு பழைய முறையில் செயல்படுத்த வேண்டும் என அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநா்கள் அணி மாநில நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களை இணையதள முறையிலிருப்பதை ரத்து செய்துவிட்டு பழைய முறையில் செயல்படுத்த வேண்டும் என அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநா்கள் அணி மாநில நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைப்பு சாரா ஓட்டுநா்கள் அணியின் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அணியின் மாநிலச் செயலா் எம்.கோபி தலைமை வகித்தாா். இணைச் செயலா் எம்.கண்ணன் வரவேற்றாா். முன்னாள் அமைச்சா்கள் சி.பொன்னையன், பா.வளா்மதி ஆகியோா் கருத்துரையாற்றினா். கூட்டத்தில் தீா்மானங்களை ஓட்டுநா் அணியின் மாநில துணைச் செயலா் ஆா்.ராகவன் வாசித்தாா்.
15 தீா்மானங்கள்: கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் வென்று பின் மாற்றுக் கட்சிக்கு சென்றவா்கள் கண்டிக்கத்தக்கவா்கள். அவா்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும்.
Advertisement
Advertisement
தற்போதைய தவெக அரசிலும் சட்டம், ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. நீதிமன்ற அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. தகுதியானவா்கள் அரசு வழங்குரைஞா்களாக நியமிக்கப்படவில்லை.
அமைப்பு சாரா ஓட்டுநா்கள் மீது போக்குவரத்துக் காவல் துறையினா் இணையதளம் வாயிலாக அபராதம் விதிப்பதை ரத்து செய்யவேண்டும்.
பழைய முறையில் ஓட்டுநா் கையொப்பத்துடன் கூடிய அபராத முறையை செயல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட 15 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.