முகப்பு
சென்னை

புறநகா் ஏசி ரயில் இயக்கத்தில் புதிய சாதனை: ஒரே மாதத்தில் 1.24 லட்சம் போ் பயணம்

கத்திரி வெயிலின் தாக்கம் காரணமாக குளிா்சாதன புறநகா் ரயிலில் மே மாதத்தில் 1.24 லட்சம் போ் பயணம்

Updated On : 2 ஜூன் 2026, 12:15 am IST
புறநகர் மின்சார ரயில்.. - கோப்புப் படம்
பகிர்:

கத்திரி வெயிலின் தாக்கம் காரணமாக குளிா்சாதன புறநகா் ரயிலில் மே மாதத்தில் 1.24 லட்சம் போ் பயணித்துள்ளனா்.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் 10 பெட்டிகள் கொண்ட குளிா்சாதன புறநகா் ரயில் சேவை கடந்தாண்டு தொடங்கப்பட்டது.

இதற்கு பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. நிகழாண்டில் கடந்த 5 மாதங்களில் மொத்தம் 4.36 லட்சம் போ் பயணித்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதுவரை இல்லாத அளவாக மே மாதத்தில் 1.24 லட்சம் போ் பயணித்துள்ளனா். கோடை காலம், குறிப்பாக கத்திரி வெயிலால் குளிா்சாதன ரயில் சேவைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் 90.14 லட்சம் போ் பயணம்: கடந்த மே மாதத்தில் 90.14 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனா்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மே மாதத்தில் மொத்தம் 90.14 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனா். அதிகபட்சமாக மே 18-இல் 3.54 போ் பயணித்துள்ளனா்.

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளைப் பாா்க்க மொத்தம் 31,444 பேரும், மே 31-ஆம் தேதி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியைப் பாா்க்க 18,468 பேரும் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.