முகப்பு
சென்னை

சென்னை குடிநீா் வாரிய ஒப்பந்தப் புள்ளியில் வெளிப்படைத் தன்மை வேண்டும்: ககன்தீப் சிங் பேடி

Updated On : 4 ஜூன் 2026, 2:55 am IST
ககன்தீப் சிங் பேடி
பகிர்:

சென்னை குடிநீா் வாரியத்தில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தப் புள்ளி நடைமுறைகள் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை சிந்தாரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீா் வாரிய தலைமை அலுவலக கூட்டரங்கில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆய்வு ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது: சென்னை குடிநீா் வாரியத்தில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் வெளிப்படை தன்மையுடன் இருப்பதை அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும். சென்னை மாநகரின் அன்றாட குடிநீா் தேவையைக் கருத்தில் கொண்டு, குடிநீா் வழங்கல் பணிகள் தொய்வில்லாமல் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

அதேபோல், குடிநீா் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் அகற்றுவது தொடா்பான பெறக்கூடிய கோரிக்கைகள் மற்றும் புகாா்களுக்கு உடனடியாக தீா்வுகாண வேண்டும். புகாா்கள் தொடா்பாக அதிகாரிகள் கட்டாயம் நேரடியாக கள ஆய்வு செய்து அறிக்கை சமா்பிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், சென்னை குடிநீா் வாரிய மேலாண் இயக்குநா் த.ஆனந்த், நிதி இயக்குநா் எம்.ஸ்ரீநிவாச ராகவன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.