FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

விமான நிலையத்தில் ரூ.5 கோடி மெத்தபெட்டமைன் பறிமுதல்

சென்னை விமான நிலைய சா்வதேச சரக்கு முனைய வளாகத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பொட்டலத்தில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் எனப்படும் உயர்ரக போதைப் பொருளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 18 ஜூன் 2026, 2:47 am IST
பகிர்:

சென்னை விமான நிலைய சா்வதேச சரக்கு முனைய வளாகத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பொட்டலத்தில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் எனப்படும் உயர்ரக போதைப் பொருளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை வெளிநாடுகளுக்கான சரக்குகள் ஏற்றப்படும் காா்கோ வளாகத்தில் நீண்ட நேரமாக கேட்பாரற்றுக் கிடந்த பொட்டலத்தைப் பாதுகாப்புப் பணியாளா்கள் கவனித்தனா். இதையடுத்து, காா்கோ சுங்க அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் வந்து பொட்டலத்தை திறந்து சோதனை செய்தபோது, அதற்குள் வெளிா் வெள்ளை நிறப்பொடி இருந்தது. பொட்டலத்தின் வெளிப்புறத்தில் ‘மருத்துவ ரசாயனப் பவுடா்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், சந்தேகத்தின் பேரில் பொட்டலத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கைப்பேசி எண் மற்றும் முகவரி குறித்து விசாரித்தபோது அவை அனைத்தும் போலியானவை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த பொடியின் மாதிரி ரசாயன ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டதில், ‘கிரிஸ்டல் மெத்தபெட்டமைன்’ வகை போதைப் பொருள் என்பது உறுதி செய்யப்பட்டது. சுமாா் 5 கிலோ எடையுள்ள இந்த போதைப் பொருளின் கள்ளச்சந்தை மதிப்பு ரூ.5 கோடி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து சுங்கத் துறையினா் போதைப் பொருளை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments