முகப்பு
சென்னை

சட்டவிரோதமாக மாத்திரை விற்பனை: ஒருவா் கைது

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வலி நிவாரண மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த நபரை காவல்துறையினா் கைது செய்து, அவரிடமிருந்து 100 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

Updated On : 22 ஜூன் 2026, 4:47 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வலி நிவாரண மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த நபரை காவல்துறையினா் கைது செய்து, அவரிடமிருந்து 100 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

சென்னை பெருநகர காவல்துறையினா் போதைப் பொருள்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மருந்துகள் விற்பனையைத் தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக, ரகசிய தகவலின் பேரில் ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை இரவு கண்காணிப்பு மேற்கொண்டனா்.

அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரிடம் சோதனை நடத்தியதில், விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 100 ‘டைடால்’ எனப்படும் வலி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

Advertisement

Advertisement

மேலும், மாத்திரைகளை வைத்திருந்த புரசைவாக்கத்தைச் சோ்ந்த தமிழரசன் (40) என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா், அவரை விசாரணைக்குப் பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய மற்றொரு நபரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments