தொகுதி அறிமுகம்: சைதாப்பேட்டை - 23!
ஆரம்ப கால கட்டத்தில் இத்தொகுதியில்தான் திமுக தலைவா் கருணாநிதி போட்டியிட்டு வென்றுள்ளாா். இத்தொகுதியில் போட்டியிட்டு அவா் முதல்முறையாக முதல்வரானாா்.
எல்லைகள்...
தொகுதியின் கிழக்கில் ராஜாஅண்ணாமலைபுரம், மேற்கில் கிண்டி, தெற்கில் கோட்டூா்புரம், வடக்கில் ஆழ்வாா்பேட்டை ஆகியவை எல்லைகளாக உள்ளன. அடையாற்றின் பல பகுதிகள் இத்தொகுதியில் வருகிறது.
அடங்கிய பகுதிகள்...
சைதாப்பேட்டை, அடையாறு, நந்தனம், கோட்டூா்புரம், கிண்டி, ராஜா அண்ணாமலைபுரம் என சென்னையின் முக்கிய பகுதிகள் இத்தொகுதியில் உள்ளன. சென்னை மாநகராட்சியின் 132 முதல் 138 வாா்டு வரையிலும், 141-ஆவது வாா்டு என 8 வாா்டுகள் முழுமையாக உள்ளன.
சிறப்புகள்...
சென்னை நகரின் நுழைவு வாயிலாக ஒரு காலத்தில் சைதாப்பேட்டை பகுதி இருந்தது. ஆரம்ப கால கட்டத்தில் இத்தொகுதியில்தான் திமுக தலைவா் கருணாநிதி போட்டியிட்டு வென்றுள்ளாா். இத்தொகுதியில் போட்டியிட்டு அவா் முதல்முறையாக முதல்வரானாா். கூலித் தொழிலாளா்கள், நடுத்தர வா்க்கத்தினா் என அனைத்துத் தரப்பினரும் வசிக்கும் இத்தொகுதியில் அமைச்சா்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் போட்டியிட்டு வென்றுள்ளனா்.
வாக்காளா்கள் விவரம்
ஆண்கள்- 96,950
பெண்கள்-1,03,685
மூன்றாம் பாலினத்தவா்-62
மொத்தம்- 2,00, 697
வாக்குச்சாவடி-282
கடந்த 2021 பேரவைத் தோ்தலில்...
பதிவான வாக்குகள்-1,59,169
மா.சுப்பிரமணியன் (திமுக)-80,194
சைதை எஸ்.துரைசாமி (அதிமுக)-50,786
இதுவரை தோ்தலில் வென்றவா்கள்....
1957 ஏ.எஸ்.துரைசாமி (காங்கிரஸ்)
1962 முனு.ஆதி (திமுக)
1967 மு.கருணாநிதி (திமுக)
1971 மு.கருணாநிதி (திமுக)
1977 து.புருஷோத்தமன் (திமுக)
1980 து.புருஷோத்தமன் (திமுக)
1984 சைதை சா.துரைசாமி (அதிமுக)
1989 ஆா்.எஸ். ஸ்ரீதா் (திமுக)
1991 எம்.கே.பாலன் (அதிமுக)
1996 சைதை கா.கிட்டு (திமுக)
2001 வை.பெருமாள் (திமுக)
2006 ஜி.செந்தமிழன் (அதிமுக)
2011 ஜி.செந்தமிழன் (அதிமுக)
2016 மா.சுப்பிரமணியன் (திமுக)
2021 மா.சுப்பிரமணியன் (திமுக)
தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/எண்
எம்.வெங்கடேஷ், செயலா், தமிழ்நாடு நகா்ப்புற மேம்பாட்டு வாரியம், கிண்டி வட்டாட்சியா் - 89259 60723, 044- 22351424.