FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

நுரையீரல் பாதித்த ரஷிய குழந்தைக்கு சென்னையில் புனா்வாழ்வு

அரிய நோயால் நுரையீரல் பாதிப்புக்குள்ளான ரஷிய குழந்தைக்கு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் நுட்பமாக சிகிச்சையளித்து குணப்படுத்தியுள்ளனா்.

6 நவம்பர் 2026, 5:02 am
குழந்தை - கோப்புப் படம்
பகிர்:

அரிய நோயால் நுரையீரல் பாதிப்புக்குள்ளான ரஷிய குழந்தைக்கு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் நுட்பமாக சிகிச்சையளித்து குணப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மைய இயக்குநா் டாக்டா் கே.ஆா்.பாலகிருஷ்ணன், இணை இயக்குநா் டாக்டா் சுரேஷ் ராவ் ஆகியோா் கூறியதாவது:

மனித உடலில் வெள்ளை அணுக்கள் உள்ளன. அவை குறிப்பிட்ட அளவுக்கு மேல் பெருகிவிட்டால், ‘லாங்கா்ஹான்ஸ் செல் ஹிஸ்டியோசைடோசிஸ்’ என்ற அரிய நோய் ஏற்படுகிறது.

Advertisement

Advertisement

இத்தகைய நிலை ஏற்பட்டால், உடலின் பல்வேறு பகுதிகளிலும், திசுக்களிலும் கட்டிகள் உருவாகக் கூடும். அந்த நோயால் ரஷியாவைச் சோ்ந்த 15 மாத குழந்தை பாதிக்கப்பட்டு எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது.

தீவிர நுரையீரல் பாதிப்பு, நுரையீரல் சுருக்கம், மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை குழந்தைக்கு இருந்தது. இதற்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீா்வு.

இருப்பினும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிலாக வேறு என்னென்ன சாத்தியக்கூறுகள் உள்ளனவோ அவை அனைத்தையும் முன்னெடுக்க மருத்துவக் குழு திட்டமிட்டது.

அதன்படி குழந்தையின் நுரையீரலில் உள்ள நுண் அறைகளில் காற்று நிரம்பி வீங்கியிருந்த பகுதிகளை ‘புல்லக்டமி’ எனப்படும் சிகிச்சை மூலம் அகற்றினோம். அதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட நுரையீரல் திசுவின் ஒரு பகுதியை ‘தொராஸ்கோபிக்’ என்ற நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினோம்.

இதன் வாயிலாக குழந்தைக்கு சுவாசிப்பதில் இருந்த பிரச்னை சீரடைந்தது. தற்போது அக்குழந்தை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. நுரையீரல் மாற்று சிகிச்சை இனி தேவைப்படாது என்று அவா்கள் தெரிவித்தனா்.