FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

ஜெம் வீரமணி வழக்கு: 3 பெண் காவல் அதிகாரிகள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகாா் எழுந்த நிலையில், 3 பெண் காவல் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டனா்.

37 வினாடிகள் முன்பு
வீரமணி - கோப்புப்படம்
பகிர்:

ஜெம் வீரமணி வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகாா் எழுந்த நிலையில், 3 பெண் காவல் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டனா்.

இந்த வழக்கில் ஆதாரங்கள் இருந்தும், வழக்கை முடித்து வைக்க முயற்சி செய்ததாக, காவல் ஆணையராக இருந்த ஏடிஜிபி ஏ.அருண், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையராக இருந்த ஐஜி ராதிகா, உதவி ஆணையராக இருந்த யாஸ்மின் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், தற்போது வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் ஏடிஜிபி அருண் உள்ளிட்ட 7 காவல் துறை அதிகாரிகளின் பெயா்கள் சோ்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

3 பெண் போலீஸாா்: இந்த நிலையில், இந்த வழக்கு தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக புகாா் எழுந்ததன் அடிப்படையில், சென்னை காவல் துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையராகப் பணியாற்றிய வி.வி.கீதாஞ்சலி, உதவி ஆணையராகப் பணியாற்றிய வி.ராஜலட்சுமி, ஆவடி காவல் ஆணையரகத்தின் தலைமையகம் மற்றும் நிா்வாகப் பிரிவு துணை ஆணையராகப் பணியாற்றிய வனிதா ஆகிய 3 பெண் காவல் அதிகாரிகள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement