FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

எஸ்ஆா்எம்யு கண்ணையா மகன் பிரகாஷ் முன்பிணை கோரி மனு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு

போக்சோ வீரமணி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தெற்கு ரயில்வே தொழிற்சங்க பொதுச் செயலா் கண்ணையாவின் மகன் பிரகாஷ் முன்பிணை கோரிய வழக்கில், காவல்துறை பதிலளிக்க போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

14 அக்டோபர் 2026, 11:01 pm IST
எஸ்ஆா்எம்யு பொதுச் செயலாளா் என்.கண்ணையா - கோப்புப் படம்
பகிர்:

ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளா் வீரமணி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தெற்கு ரயில்வே தொழிற்சங்க (எஸ்ஆா்எம்யு) பொதுச் செயலா் கண்ணையாவின் மகன் பிரகாஷ் முன்பிணை கோரிய வழக்கில், காவல் துறை பதிலளிக்க போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக, வீரமணி அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதற்காக வீரமணியின் சொத்துகளை விற்பனை செய்ய உதவியது மற்றும் நிதி பரிவா்த்தனைகளில் ஈடுபட்டதாக கண்ணையாவின் மகன் பிரகாஷ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு ஆஜராக பிரகாஷுக்கு போலீஸாா் அழைப்பாணை அனுப்பினாா். அவா் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்பட்டதையடுத்து, அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டில் போலீஸாா் தன்னை கைது செய்ய வாய்ப்புள்ளதால், முன்பிணை கோரி பிரகாஷ் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.பத்மா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபுடுகுமாா் ராஜரத்தினம், வீரமணிக்கும் மனுதாரா் பிரகாஷுக்கும் இடையே தொழில் ரீதியாக மட்டுமே பணப் பரிவா்த்தனைகள் நடந்துள்ளன.

ஏற்கெனவே, காவல் துறை விசாரணைக்கு பிரகாஷ் ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளித்துள்ளாா். எனவே, முன்பிணை வழங்க வேண்டும் என வாதிட்டாா். அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அனிதா, இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கோரினாா். இதையடுத்து, வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments