போக்சோ வீரமணியின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு வீரமணியின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டிருப்பது பற்றி....
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஜெம் கிரானைட் உரிமையாளா் வீரமணி கடந்த ஆக. 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஏராளமான சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக வந்த தகவலைத் தொடா்ந்து, ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டாா்.
இதுவரை ஜெம் வீரமணிக்கு எதிராக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஒரு வழக்கில் அவா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரையில் நடந்த சம்பவம் தொடா்பான போக்சோ வழக்கில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் வீரமணி கைது செய்துபட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் வீரமணி காணொளி மூலம் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை அக்டோபர் 23ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The judicial custody of Gem R Veeramani, who was arrested and imprisoned in a POCSO case, has been further extended.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.