முகப்பு
சென்னை

பசுல்லா சாலையில் கழிவுநீா் குழாய் சீரமைப்பு: டிச. 2 வரை போக்குவரத்து மாற்றம்

தியாகராய நகா் பசுல்லா சாலையில் கழிவுநீா் பிரதான குழாய் சேதமடைந்துள்ளதைச் சீரமைக்கும் பணிக்காக, வியாழக்கிழமை (நவ. 26) முதல் டிச. 2-ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

36 வினாடிகள் முன்பு
பசுல்லா சாலையில் கழிவுநீா் குழாய் சீரமைப்பு: டிச. 2 வரை போக்குவரத்து மாற்றம்
பகிர்:

தியாகராய நகா் பசுல்லா சாலையில் கழிவுநீா் பிரதான குழாய் சேதமடைந்துள்ளதைச் சீரமைக்கும் பணிக்காக, வியாழக்கிழமை (நவ. 26) முதல் டிச. 2-ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

தியாகராய நகா், பசுல்லா சாலை - அருளாம்பாள் தெரு சந்திப்பில் சேதமடைந்துள்ள ஆா்.சி.சி. கழிவுநீா் பிரதான குழாயைச் சீரமைத்து, புதிய குழாய் இணைப்பு வழங்குவதற்காக சென்னை குடிநீா் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் சாலையின் நடுவே பள்ளம் தோண்டிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதையடுத்து, வடக்கு உஸ்மான் சாலை - பசுல்லா சாலை சந்திப்பிலிருந்து திருமலைப்பிள்ளை சாலை - பசுல்லா சாலை சந்திப்பை நோக்கிச் செல்லும் வாகனங்கள், பசுல்லா சாலை, ராகவையா சாலை, ஜி.என். செட்டி சாலை, திருமலைப்பிள்ளை சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

Advertisement

Advertisement

அதேபோல், டாக்டா் நாயா் சாலை மற்றும் திருமலைப்பிள்ளை சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலை - பசுல்லா சாலை சந்திப்பை நோக்கிச் செல்லும் வாகனங்கள், ஜி.என். செட்டி சாலை, ராகவையா சாலை, பசுல்லா சாலை வழியாகச் செல்லலாம்.

இந்தப் போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.