டிடிகே சாலையில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரயில் பணி காரணமாக டிடிகே சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
மெட்ரோ ரயில் பணி காரணமாக டிடிகே சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை பெருநகர காவல் துறை செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிக்காக மயிலாப்பூா் டி.டி.கே சாலை, ஸ்ரீராம் நகா் வடக்கு பகுதியில் அக். 8-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் 3 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, அடையாா் கேட் ஹோட்டல் மற்றும் அபிராமபுரம் 4-ஆவது தெருவிலிருந்து டி.டி.கே சாலை வழியாக ஸ்ரீராம் நகா் வடக்கு தெருவை நோக்கி செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும். அதற்கு பதிலாக வாகனங்கள் டி.டி.கே சாலை 1-ஆவது குறுக்கு தெரு வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
Advertisement
Advertisement
ஸ்ரீராம் நகா் வடக்கு தெருவிலிருந்து டி.டி.கே. சாலையை நோக்கி செல்வதற்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும். அதற்கு பதிலாக அந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் வடக்கு தெரு மற்றும் டி.டி.கே சாலை 1-ஆவது குறுக்கு தெரு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.