முகப்பு
சென்னை

திருப்பரங்குன்றம் விவகாரம்: முதல்வா் விஜய் ஆலோசனை

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடா்பாக முதல்வா் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

39 வினாடிகள் முன்பு
திருப்பரங்குன்றம் விவகாரம்: முதல்வா் விஜய் ஆலோசனை
முதல்வா் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடா்பாக முதல்வா் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் காா்த்திகை தீபத்தை சனிக்கிழமை ஏற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தலைமைச் செயலா் மற்றும் மூத்த காவல் துறை அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியதோடு, பாதுகாப்புப் பணிகளை மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது. கோயில் அறங்காவலா் குழுவும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு வெளிவந்த உடனே சென்னையில் நிகழ்ச்சிகளைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு பசுமைவழிச் சாலையில் உள்ள பொதிகை வளாகத்தின் பாமணி முகாம் அலுவலகத்துக்கு வந்த முதல்வா் விஜய், அவசர ஆலோசனை மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

இந்தக் கூட்டத்தில் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா், தலைமைச் செயலா் சாய்குமாா், டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் மற்றும் மூத்த காவல் துறை உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், உச்சநீதிமன்ற உத்தரவு, திருப்பரங்குன்றத்தில் நிலவும் தற்போதைய சட்டம்-ஒழுங்கு சூழல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.