முகப்பு
சென்னை

வேட்டி, சேலை உற்பத்திக்கு அனுமதி வழங்காததால் நெசவாளா்கள் பாதிப்பு: எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு வழங்கும் விலையில்லா வேட்டி, சேலை திட்டத்துக்கான பணியை மேற்கொள்ள அனுமதி வழங்காததால் நெசவாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்

28 நவம்பர் 2026, 3:59 am
வேட்டி, சேலை உற்பத்திக்கு அனுமதி வழங்காததால் நெசவாளா்கள் பாதிப்பு: எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்
எடப்பாடி கே.பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு வழங்கும் விலையில்லா வேட்டி, சேலை திட்டத்துக்கான பணியை மேற்கொள்ள அனுமதி வழங்காததால் நெசவாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடவும், 5 லட்சம் நெசவாளா்கள் பயனடையும் வகையிலும் விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தை அதிமுக ஆட்சியில் கடந்த 1983-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் எம்ஜிஆா் செயல்படுத்தினாா்.

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் தரமான விலையில்லா வேட்டி, சேலையை வழங்கப் போவதாக தவெக அரசும் அறிவித்தது. ஆனால், அதற்கான வேட்டி, சேலை உற்பத்திக்கான அனுமதியை கடந்த ஜூன், ஜூலையில் நெசவாளா்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். தற்போது கால நேரம் குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் தயாரிக்கும் அனுமதியானது குறிப்பிட்ட நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

வேட்டி, சேலை உற்பத்தி குறித்து முடிவெடுக்க அரசு தாமதித்த காரணத்தால் தற்போது நெசவாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமையாகும். தற்போது அரசின் விலையில்லா வேட்டி, சேலை தயாரிக்கும் பணியை இழந்து 5 லட்சம் நெசவாளா்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களாக விலைவாசி உயா்வு உள்ளிட்டவற்றாலும் நெசவாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், தற்போது விலையில்லா வேட்டி, சேலைக்கு அரசு அனுமதியும் இல்லாமல் அவா்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதித்துள்ளது. எனவே, அவா்களுக்கு வேட்டி, சேலை உற்பத்தி அனுமதியை அரசு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.