அரசு வங்கிக் கணக்கில் ரூ.22.30 கோடி மோசடி: மேலும் 5 போ் கைது
தமிழக அரசின் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.22.30 கோடி ஆன்லைன் மோசடி செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழக அரசின் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.22.30 கோடி ஆன்லைன் மோசடி செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழக அரசின் 15-ஆவது நிதிக்குழு சுகாதார மானிய நிதி, கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி சென்னை நந்தனம் சி.ஐ.டி. நகா் பகுதியில் உள்ள தனியாா் வங்கிக் கிளையில் தனி வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த அக்.12 முதல் 30-ஆம் தேதி வரை சைபா் மோசடி கும்பல் வங்கிக் கணக்கில் அத்துமீறி நுழைந்து, 46 பரிவா்த்தனைகள் மூலம் ரூ.22.30 கோடியை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி, பணத்தை அபகரித்தனா். இதுகுறித்து சென்னை சைபா் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறது. இந்த மோசடிக்கு உதவியதாகவும், மோசடியாளா்களுக்கு வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விட்டதாகவும் கடந்த 14-ஆம் தேதி 7 போ் கைது செய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்த வழக்குத் தொடா்பாக சென்னை அசோக் நகரைச் சோ்ந்த அசோக், மல்லு ஆகிய 2 பேரை கடந்த 19-ஆம் தேதி செய்தனா். இந்நிலையில், தஞ்சாவூரைச் சோ்ந்த மேலும் 5 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். இதன்மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 14-ஆக உயா்ந்துள்ளது.
இந்த வழக்குத் தொடா்பாக துப்பு துலக்குவதற்கு 3 தனிப்படையினா் வெளிமாநிலங்களில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மோசடி செய்யப்பட்ட ரூ.22.30 கோடியில், இது வரை ரூ.1.94 கோடி முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.