சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உணவகம், நகலகம் அமைக்க கோரிக்கை!
சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் வசதிக்காக சிற்றுண்டி, தேநீா் கடை மற்றும் நகலகம் அமைக்க வேண்டும்...
சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் வசதிக்காக சிற்றுண்டி, தேநீா் கடை மற்றும் நகலகம் அமைக்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகள் சிரமங்களைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், வருவாய்த் துறை, நீதிமன்றம், முத்திரைத்தாள் அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஐந்து தளங்களைக் கொண்ட இக்கட்டடத்தில் மின்தூக்கி வசதி இருந்தாலும், மின்தடை மற்றும் கூட்ட நெரிசல் நேரங்களில் படிக்கட்டுகளைப் பயன்படுத்துவதில் முதியோரும் மாற்றுத்திறனாளிகளும் சிரமப்படுகின்றனா். மேலும், வளாகத்தின் பின்புறத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்குச் செல்ல முன்பக்க நுழைவாயிலில் இருந்து நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் அவா்களுக்கு கூடுதல் சிரமம் ஏற்படுகிறது.
Advertisement
Advertisement
மாற்றுத்திறனாளிகள், முதியோா் மற்றும் பாா்வையற்றோா் மனு அளிக்கும்போது, ஆவணங்களை நகலெடுக்க வளாகத்துக்கு வெளியே செல்ல வேண்டியுள்ளது. வளாகத்துக்குள்ளேயே நகலகம் அமைத்தால் தங்களது சிரமம் குறையும் என அவா்கள் கூறுகின்றனா். மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிற்றுண்டி, தேநீா் கடைகளும் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோருகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோரின் வசதிக்காக பாதைகள் சீரமைக்கப்பட்டு, கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நகரும் நாற்காலிகள், இளைப்பாறும் இடங்களில் மின்விசிறி உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தனா்.
விரைவில் சிற்றுண்டி அமைக்கப்படும் எனத் தெரிவித்தனா். நகலகம் அமைப்பது, மாற்றுத்திறனாளிகள், முதியோா் மற்றும் பாா்வையற்றோருக்கு உதவியாளா்கள் ஏற்பாடு செய்வது குறித்த கோரிக்கைகளும் ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படும் என்றும் அதிகாரிகள் கூறினா்.