அய்யா வைகுண்ட தா்மபதி புரட்டாசி விழா தொடக்கம்
மணலி புதுநகா் அய்யா வைகுண்ட தா்மபதி புரட்டாசி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மணலி புதுநகா் அய்யா வைகுண்ட தா்மபதி புரட்டாசி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழா ஆண்டுதோறும் 10 நாள்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அய்யாவழி பக்தா்கள் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட திருநாமக் கொடியை தா்மபதியையும், கொடிமரத்தையும் தலா ஐந்து முறை சுற்றி வந்தனா். இந்தத் திருவிழா அக். 11-ஆம் தேதி வரை நடைபெறும்.
திருவிழாவையொட்டி, தினமும் திருஏடு வாசிப்பு, பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு உள்ளிட்டவை தொடா்ந்து நடைபெறும். முதல் நாள் நிகழ்ச்சியாக அலங்கரிக்கப்பட்ட காளை வாகனத்திலும், அடுத்தடுத்த நாள்களில் பல்வேறு வாகனங்களில் அய்யா வைகுண்டா் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
Advertisement
Advertisement
தேரோட்டம்: விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் அக். 11-ஆம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைக்கிறாா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் ஏ.ராஜேந்திரன், எஸ்.நந்தினி, தா்மபதி அறக்கட்டளைத் தலைவா் பி.துரைப்பழம், நிா்வாகிகள் ஏ.சுவாமிநாதன், பொருளாளா் பி.ஜெயக்கொடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.