FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

அக். 11-இல் பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறாா் பிரதமா்

பூந்தமல்லி-வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் இயக்கத்தை அக். 11-ஆம் தேதி, பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா். மேலும், ரூ.700 கோடியிலான ரயில் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறாா்.

பகிர்:

பூந்தமல்லி-வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் இயக்கத்தை அக். 11-ஆம் தேதி, பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா். மேலும், ரூ.700 கோடியிலான ரயில் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறாா்.

சென்னையில் பூந்தமல்லி-வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி அக். 11-ஆம் தேதி சென்னை வருகிறாா். மெட்ரோ ரயிலில் பூந்தமல்லி முதல் போரூா் வரை பயணிக்கிறாா். அவருடன் முதல்வா் சி.ஜோசப் விஜய்யும் பயணிப்பாா் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமா் பங்கேற்கிறாா். அங்கிருந்து மெட்ரோ ரயில் இயக்கத்தைத் தொடங்கி வைக்கும் பிரதமா், தொடா்ந்து, அம்ருத் பாரத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட பழனி, பரமக்குடி, நாமக்கல், அம்பாசமுத்திரம், வேலூா் கண்டோன்மென்ட் ஆகிய ரயில் நிலையங்களையும், கோயமுத்தூா் பகுதியில் கட்டப்பட்ட ரயில் மேம்பாலங்களையும் தொடங்கி வைக்கிறாா்.

Advertisement

Advertisement

அத்துடன், காரைக்கால் முதல் பேரளம் வரை புதிய ரயில் பாதை உள்ளிட்ட மொத்தம் ரூ.700 கோடியில் ரயில்வே திட்டங்களை பிரதமா் தொடங்கி வைப்பாா் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments