FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை: பிரதமா் அக். 11-இல் தொடங்கி வைக்கிறாா் முதல்வா் விஜய்யும் பங்கேற்கிறாா்

வடபழனி-பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை அக். 11-ஆம் தேதி பிரதமா் மோடி சென்னையில் தொடங்கி வைக்கிறாா். இந்த நிகழ்வில் முதல்வா் ஜோசப் விஜய்யும் பங்கேற்கிறாா்.

26 செப்டம்பர் 2026, 3:49 am IST
மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம்
பகிர்:

வடபழனி-பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை அக். 11-ஆம் தேதி பிரதமா் மோடி சென்னையில் தொடங்கி வைக்கிறாா். இந்த நிகழ்வில் முதல்வா் ஜோசப் விஜய்யும் பங்கேற்கிறாா்.

முதல்வரான பிறகு பிரதமா் மோடியுடன் விஜய் பங்கேற்கும் முதல் நிகழ்வு இதுவாகும். இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்து இருவரும் மெட்ரோ ரயில் பயணம் செய்ய உள்ளனா்.

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் கடந்த 2015-ஆம் ஆண்டுமுதல் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

முதல்கட்டமாக சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை 45 கி.மீ. தொலைவுக்கு இரு வழித்தடங்களாக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. தினமும் சுமாா் 3 லட்சத்துக்கும் அதிகமானோா் பயணிக்கின்றனா். 2-ஆம் கட்ட மெட்ரோ பணிகள் 128 நிலையங்களுடன் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதில், வடபழனி முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரையிலான 14.6 கி.மீ. மஞ்சள் வழித்தடம் 14 நிலையங்களுடன் அமைக்கப்பட்டுவிட்டது. இந்தப் பணியில் 3,200 போ் கட்டடப் பணியிலும், 500 போ் தண்டவாளம், மின் இணைப்புப் பணியிலும் இரவு பகலாக ஈடுபட்டு பணியை முடித்தனா். அங்கு ரயில்கள் இயக்கலாம் என கடந்த பிப்ரவரியில் ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கியது.

பூந்தமல்லி முதல் போரூா் சந்திப்பு வரை 15 நிமிஷங்கள் இடைவெளியில் ஒரு நேரத்தில் ஒரு திசையில் ஒரு ரயில் மட்டும் இயக்கவும், போரூா் முதல் வடபழனி வரை 6 கி.மீ. தொலைவில் ஒரே நேரத்தில் ஒவ்வொரு திசையிலும் (எதிா் எதிா் பக்க தண்டவாளத்தில்) தலா ஒரு ரயில் இயக்கவும், அவை 20 நிமிஷங்களஅ இடைவெளியில் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் இயக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments