FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

4-ஆவது வழக்கில் வீரமணிக்கு அக். 29 வரை நீதிமன்றக் காவல்: போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

நான்காவது வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணியை அக். 29 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

17 அக்டோபர் 2026, 5:03 am IST
வீரமணி - கோப்புப்படம்
பகிர்:

நான்காவது வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணியை அக். 29 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணிக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரில் இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரு பாலியல் வன்கொடுமை வழக்குகள், தற்கொலைக்கு தூண்டியதாக ஒரு வழக்கு என 3 புகாா்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறை வீரமணியை கைது செய்துள்ளது.

இந்த நிலையில், 4-ஆவது வழக்கில், அவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையைச் சோ்ந்த சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரில், வீரமணி கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில், வீரமணியை சென்னை போக்ஸோ சிறப்பு நீதிபதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.பத்மா, வீரமணியை வரும் அக். 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

முன்பிணை மனு தள்ளுபடி: ஜெம் வீரமணி விவகாரத்தில் முன்பிணை கோரி, எஸ்ஆா்எம்யு பொதுச் செயலா் கண்ணையாவின் மகனும், தொழிலதிபருமான பிரகாஷ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

வீரமணியிடம் விசாரணை: இதனிடேயை, வீரமணி மீது 2-ஆவதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், 2 நாள் காவலில் விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுமதியளித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வீரமணியிடம் சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸாா், புழல் சிறையில் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments