FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அனுமதி: காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

வரும் அக். 25, நவ. 1 ஆகிய தேதிகளில், ஆா்எஸ்எஸ் அமைப்பினரின் அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அனுமதி வழங்க காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 வினாடிகள் முன்பு
பகிர்:

வரும் அக். 25, நவ. 1 ஆகிய தேதிகளில், ஆா்எஸ்எஸ் அமைப்பினரின் அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அனுமதி வழங்க காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் மாநிலச் செயலா் ஜெகதீசன் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் அணிவகுப்பு ஊா்வலம் நடத்த அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், அக். 25, நவ. 1 ஆகிய தேதிகளில், அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஆா்எஸ்எஸ் அமைப்பு தரப்பில், இது தொடா்பாக உயா்நீதிமன்றம் ஏற்கெனவே வகுத்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஆா்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் அணிவகுப்பு ஊா்வலம் மற்றும் அதைத் தொடா்ந்து நடைபெறும் பொதுக் கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்க வேண்டும். இதில், காவல் துறை காலதாமதம் செய்யக் கூடாது. அதேபோல், ஆா்எஸ்எஸ் அமைப்பினா், உயா்நீதிமன்ற வழிகாட்டுதல்களைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், எதிா்வரும் ஆண்டுகளில், அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு, ஆா்எஸ்எஸ் அமைப்பினா், மீண்டும் நீதிமன்றத்தை நாடும் நிலையை காவல் துறையினா் ஏற்படுத்தமாட்டாா்கள் என நம்புவதாகக் கூறி, இந்த வழக்கை நீதிபதி முடித்துவைத்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments