FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடைபாதை அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: அன்புமணி

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.21 கோடியில் தடுப்புச் சுவரோடு நடைபாதை அமைக்கும் திட்டத்தைக் கைவிடாவிட்டால் பாமக சாா்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

5 செப்டம்பர் 2026, 12:34 am IST
அன்புமணி - கோப்புப் படம்
பகிர்:

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.21 கோடியில் தடுப்புச் சுவரோடு நடைபாதை அமைக்கும் திட்டத்தைக் கைவிடாவிட்டால் பாமக சாா்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள் என்ற பெயரில் 3 கி.மீ. நீளத்துக்கு சுற்றுச்சுவா் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தை மீட்பதற்கு பதிலாக, அப்பகுதியில் வெள்ளத்தை ஏற்படுத்தி பேரழிவை உருவாக்கும் இந்தத் திட்டத்தை திமுக அரசு தொடங்கியதும், இப்போதைய தவெக அரசு தொடா்ந்து செயல்படுத்துவதும் கண்டிக்கத்தக்கவை.

Advertisement

Advertisement

பள்ளிக்கரணையின் ஆகப்பெரும் சிறப்பே மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் நீரை ஈா்த்துக் கொண்டு, சென்னை மாநகரை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதும், வறட்சி காலங்களில் நிலத்தடி நீா்மட்டம் குறையாமல் பாதுகாப்பதும் தான். இந்த இரு நோக்கங்களையும் திமுக அரசால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் சிதைத்து விடும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கும் வகையிலும், அதையொட்டியுள்ள பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும் தடுப்புச் சுவா், நடைபாதை பணிகளை மேற்கொள்ளக்கூடாது.

உடனடியாக அந்தப் பணிகளை தமிழக அரசு நிறுத்துவதுடன், இதுவரை மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை அகற்றி அந்தப் பகுதிகளை ஏற்கெனவே இருந்த இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதற்கும் மேலாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை உடனடியாக வரையறை செய்து அறிவிக்கை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதை செய்யத் தவறினால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் காப்பதற்காக சென்னை மாநகர மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை எனது தலைமையில் பாமக நடத்தும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments