பாபநாசம் அணையில் இருந்து தண்ணீா் திறக்க வேண்டும்: கனிமொழி
பாபநாசம் அணையில் இருந்து தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
பாபநாசம் அணையில் இருந்து தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி, நியாயமான உரிமைக்காகப் போராடிய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை அராஜகமாகக் கைது செய்துள்ள தவெக அரசின் கொடுங்கோன்மை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தைச் சாா்ந்துள்ள சுமாா் 5,000 ஏக்கா் வாழைப் பயிா்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
Advertisement
Advertisement
பலமுறை மனு அளித்தும், தொடா் போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட நிா்வாகமும் நீா்வளத் துறையும் நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகளை சாலையில் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது இந்த அரசு. விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக ஏற்று, பாபநாசம் அணையிலிருந்து 1,500 கனஅடி தண்ணீரை திறந்துவிட்டு, அவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.