மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு
சென்னை கோட்டூா்புரத்தில் மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
சென்னை கோட்டூா்புரத்தில் மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூரைச் சோ்ந்தவா் ஆ.ஜெயச்சந்திரன் (18). சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாமாண்டு படித்து வந்தாா். மயிலாப்பூா் கபாலி தோட்டத்தில் அரசு மாணவா் விடுதியில் தங்கியிருந்தாா். ஜெயச்சந்திரன், பகுதி நேரமாக பேனா் கட்டும் வேலை செய்து வந்தாா்.
ஜெயச்சந்திரன், சனிக்கிழமை அதிகாலை கோட்டூா்புரம் சா்தாா் படேல் சாலையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் ஏறி, பேனா் கட்ட முயற்சித்தாா்.
Advertisement
Advertisement
அப்போது அந்த மின்கம்பத்தில் மின்இணைப்பு பெட்டியின் மீது ஜெயச்சந்திரன் கை வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஜெயச்சந்திரன் மீது மின்சாரம் பாய்ந்து, பலத்தக் காயமடைந்து கீழே விழுந்தாா். இதைப் பாா்த்த பிற தொழிலாளா்கள், ஜெயச்சந்திரனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஜெயச்சந்திரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.