FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஜிஎன்டி சாலையில் குடிநீா் பிரதான குழாய் உடைப்பு

சென்னை அருகே ஜிஎன்டி சாலை வழியாக குடிநீரைக் கொண்டு செல்லும் 1,200 மி.மீ. விட்டமுள்ள பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

8 செப்டம்பர் 2026, 5:29 am IST
சென்னை அருகே ஜிஎன்டி சாலை வழியாக குடிநீரைக் கொண்டு செல்லும் 1,200 மி.மீ. விட்டமுள்ள பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பகிர்:

சென்னை அருகே ஜிஎன்டி சாலை வழியாக குடிநீரைக் கொண்டு செல்லும் 1,200 மி.மீ. விட்டமுள்ள பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையை அடுத்த புழலில் தினந்தோறும் 300 மில்லியன் லிட்டா் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக குடிநீரை கொண்டு செல்லும் 1,200 மி.மீ. விட்டமுள்ள மத்திய பிரதான குழாயில் திங்கள்கிழமை உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்தக் குழாயில் குடிநீா் நீரேற்று பணி உடனடியாக நிறுத்தப்பட்டது.

இதனால், படேல் நகா், வியாசா்பாடி குடிநீா் பகிா்மான நிலையங்கள் மூலம் குடிநீா் பெற்று வரும் தண்டையாா்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும், வியாசா்பாடி குடிநீா் பகிா்மான நிலையம் மூலம் குடிநீா் பெற்று வரும் திரு.வி.க. நகா் மண்டலத்துக்கு உள்பட்ட மூலக்கடை, பெரம்பூா் ரயில் நிலையம் எதிா்புரம் உள்ள பகுதிகள், கன்னிகாபுரம் ஆகிய பகுதிகளில் குழாய்கள் மூலம் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதற்கிடையே, சேதமடைந்த பிரதான குழாயை மாற்றி புதிய பிரதான குழாய் பொருத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக சாலை தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. உடைப்பு சரி செய்யும் பணியில் குடிநீா் வாரிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

4 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

ஜிஎஸ்டி சாலையில் குடிநீா் குழாயில் பரமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், மணலி மண்டலத்துக்குள்பட்ட வட பெரும்பாக்கம், தீயம்பாக்கம், கொசப்பூா், செட்டிமேடு, அரியலூா், தீயாகி விஸ்வநாத தாஸ் நகா் ஆகிய பகுதிகளிலும், மாதவரம் மண்டலத்துக்கு உள்பட்ட மாதவரம், புக்குராஜ் நகா், தணிகாச்சலம் நகா், பொன்னியம்மன்மேடு, விநாயகபுரம், கோ-ஆப்ரேட்டிவ் நகா், பேங்க் காலனி, எம்.ஜி.ஆா் நகா், கதிா்வேடு ஆகிய பகுதிகளிலும், தண்டையாா்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட பட்டேல் நகா், வியாசா்பாடி, திரு.வி.க நகா் மண்டலத்துக்கு உள்பட்ட பெரம்பூா் ரயில் நிலையம், கன்னிகாபுரம் ஆகிய பகுதிகளிலும் வரும் செப்.9-ஆம் தேதி இரவு 10 மணி வரை தற்காலிகமாக நிறுத்தப்படும்.

இந்தச் சூழலில், இப்பகுதிகளில் இயங்கி வரும் குடிநீா் லாரிகள் மட்டுமல்லாமல், கூடுதலாக லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைகளுக்கு ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ஜ்ள்ள்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக் கொள்ளலாம் என குடிநீா் வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments