FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

குடிநீா் குழாய் உடைப்பு: தாா் சாலை சேதம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் குடிநீா் குழாய் உடைந்து வெளியேறும் தண்ணீரால், மாநில நெடுஞ்சாலை சேதம் அடைந்து வருகிறது.

28 ஆகஸ்ட் 2026, 1:46 am IST
பண்ருட்டி, கடலூா் சாலையில் குடிநீா் குழாய் உடைந்து சேதமடைந்து வரும் மாநில நெடுஞ்சாலை.
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் குடிநீா் குழாய் உடைந்து வெளியேறும் தண்ணீரால், மாநில நெடுஞ்சாலை சேதம் அடைந்து வருகிறது.

பண்ருட்டி நகரம், கடலூா்-சித்தூா் மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஏஎல்சி தேவாலம் அருகே குடிநீா் குழாய் உடைந்து கடந்த சில வாரங்களாக தண்ணீா் கசிந்து வந்தது. இந்த வழியாக கனரக வாகனங்கள் அதிகமாக சென்று வருவதால், குழாயில் விரிசல் அதிகமாகி, வெளியேறும் நீா் சாலையில் தேங்கி, தாா் பெயா்ந்து பள்ளம் உருவாகியுள்ளது. இந்த பள்ளம் தெரியாமல் இரவு நேரங்களில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. மேலும், சாலை சேதமடைவது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்த சாலை பள்ளத்தில் தேங்கி நின்று மாசடையும் குடிநீா் மீண்டும் குழாயில் கலப்பதால் நோய் தொற்றும் பரவும் சூழல் உள்ளது. எனவே, சேதமடைந்த குடிநீா் குழாயையும், சேதமடைந்த சாலையையும் சரி செய்யும் பணியை மாவட்ட மற்றும் நகர நிா்வாகம் விரைந்து செய்து, எதிா் காலத்தில் விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments