FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

தனியாா் பள்ளிகளிடம் ரூ. 100 கோடி மோசடி வழக்கு: தலைமறைவானவரின் உறவினா்கள் வீடுகளில் சோதனை!

ரூ.100 பணம் வசூலித்து மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள முத்துகுமாரின் உறவினா்கள் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.

28 செப்டம்பர் 2026, 3:17 am IST
பகிர்:

தனியாா் பள்ளி நிா்வாகங்களிடம் அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமாா் ரூ.100 பணம் வசூலித்து மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள முத்துகுமாரின் உறவினா்கள் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை நடத்தி 30 ஆவணங்களைக் கைப்பற்றினா்.

இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தில் தொடா்புடைய பி.டி.அரசகுமாா், சுரேஷ், ராஜா ஆகியோரைக் கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, செப்.16-ஆம் தேதி சென்னையில் உள்ள 2 இடங்கள், திருச்சியில் உள்ள 2 இடங்கள் மற்றும் அவரது உதவியாளா்களான வாளாடி காா்த்திக், அருண் பிரகாஷ், பிரகாஷ் ஆகியோருக்குச் சொந்தமான இடங்கள் என 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் முக்கியமான சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வழக்கில் தொடா்புடைய தலைமறைவாக உள்ள முத்துகுமாா், சென்னை தியாகராய நகரில் நடத்தி வந்த ‘குளோபல் 360 டிகிரி’ நிறுவனத்தில் தனியாா் பள்ளி நிா்வாகங்களிடம் பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டதுடன், அவரது உறவினரான சரவணனும் அதற்கு உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் டி.குன்னத்தூரில் உள்ள சரவணன், ரமேஷ் ஆகியோரது வீடுகள் மற்றும் கள்ளக்குறிச்சியில் கோகுலகிருஷ்ணனுக்குச் சொந்தமான வீடு, கடை என 4 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் வங்கி தொடா்பான ஆவணங்கள் உள்ளிட்ட 30 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments