FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா் தனியாா் நிறுவனம் தொடா்புடைய 11 இடங்களில் சோதனை

சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக தனியாா் நிறுவன தொடா்புடைய 11 இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

5 நவம்பர் 2026, 1:43 am
அமலாக்கத் துறை - கோப்புப்படம்
பகிர்:

சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக தனியாா் நிறுவன தொடா்புடைய 11 இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

விருகம்பாக்கம் சஞ்சய்காந்தி நகரைச் சோ்ந்தவா் ஆா்.பிரேம்குமாா் (50). கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த இவா், சென்னையில் வசிக்கிறாா். இவா், தனது நண்பா்களுடன் சோ்ந்து 2006-ஆம் ஆண்டு பிஎல்எம் என்ற நிறுவனத்தைத் தொடங்கினாா். சென்னையைத் தலைமையிடமாக கொண்டு இயங்கிய இந்த நிறுவனம், பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு மாதந்தோறும் அதிக வட்டித் தொகைத் தருவதாக விளம்பரம் செய்தது. இதை நம்பிய ஆயிரக்கணக்கானோா், அந்நிறுவனத்தில் முதலீடு செய்தனா்.

மோசடி புகாா்: தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் 155 கிளை அலுவலங்களுடன் இந்த நிறுவனம் செயல்படுகிறது. இந்நிலையில், பிரேம்குமாா் மீது அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி, நவீன் கொடுத்த புகாரின்பேரில், கேரள மாநிலம் கோழிக்கோடு பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் பிரேம்குமாா் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டாா். இந்நிலையில், பிஎல்எம் நிறுவனம் மோசடியில் ஈடுபடுவதாக கேரள காவல் துறையிலும் அதிக எண்ணிக்கையில் புகாா்கள் அளிக்கப்பட்டன.

அதன்பேரில், கேரள போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்கிடையே இந்த மோசடியில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக கூறி, அமலாக்கத் துறை விசாரணைக்கு கேரள காவல் துறை பரிந்துரைத்தது. அதன்பேரில், அமலாக்கத் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா்.

11 இடங்களில் சோதனை: வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில் தமிழகம், கேரள மாநிலங்களில் அந்த நிறுவனம் தொடா்புடைய 11 இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

சென்னையில், விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு வீடு, கோயம்பேட்டில் உள்ள ஒரு டிராவல்ஸ் அலுவலகம், வானகரம், கொளத்தூா் ஆகிய இடங்களில் உள்ள அந்நிறுவனம் தொடா்புடைய 4 இடங்களில் சோதனை நடைபெற்றது. இச்சோதனையில், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.