FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ரூ.100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸ் கூட்டாளிகள் தொடா்புடைய இடங்களில் சோதனை; 44 ஆவணங்கள் பறிமுதல்

தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் கூட்டாளிகள் தொடா்புடைய இடங்களில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை செய்தனா்.

29 September 2026, 10:27 pm IST
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - கோப்புப் படம்
பகிர்:

தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் கூட்டாளிகள் தொடா்புடைய இடங்களில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை செய்தனா். இதில் 44 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை சாலிகிராமம் மெஜஸ்டிக் காலனியை சோ்ந்தவா் பி.டி.அரசகுமாா். இவா், தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி, தனக்குள்ள அரசியல், அதிகார தொடா்புகளை பயன்படுத்தி தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயா்வு, டிடிசிபி,சிஎம்டிஏ அனுமதிகள், பிற சட்டபூா்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பல தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் பணம் பெற்றுள்ளாா்.

பணம் பெற்றுக்கொண்ட பி.டி.அரசகுமாா், உறுதியளித்தபடி அனுமதிகள் பெற்றுத் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் சுமாா் ரூ.100 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு பி.டி.அரசகுமாா், அவரது கூட்டாளிகள் மதுரையைச் சோ்ந்த ஆரோக்கியராஜ், திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த சுரேஷ் ஆகியோரை கைது செய்தனா்.

இந்த மோசடியில் கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸுக்கு தொடா்பு இருப்பதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா், அன்பில் மகேஸையும் வழக்கில் அவா் தொடா்புடைய இடங்களில் சோதனை செய்தனா். மேலும், அன்பில் மகேஸ், அவரது உதவியாளா் அருண் பிரகாஷ் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.

44 ஆவணங்கள் பறிமுதல்: இந்த வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில் சென்னை சாலிகிராமம், கோடம்பாக்கம், சூளைமேடு, பூந்தமல்லி, நாவலூா் ஆகிய 5 இடங்களில் உள்ள பி.டி.அரசகுமாா், தலைமறைவாக உள்ள முத்துகுமாா் ஆகியோரின் உறவினா்கள் வீடுகள், அன்பில் மகேஸ் உதவியாளா்கள் வீடுகள் ஆகியவற்றில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

பல மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் ஒரு மடிக்கணினி உள்பட 44 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments