பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வருவாய்த் துறை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வருவாய்த் துறை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற பேரணியை வருவாய் கோட்டாட்சியர் ராஜு கொடியசைத்து தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, சின்னக்கடை தெரு, திருமங்கை ஆழ்வார் தெரு, தேரடி, காந்தி சாலை வழியாகச் சென்று மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதில், வருவாய்த் துறை அதிகாரிகள், ஸ்ரீபெரும்புதூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது, பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதேபோல், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் சுங்குவார்சத்திரம், வல்லம், செரப்பனஞ்சேரி, படப்பை ஆகிய பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.