இயந்திர கல் உடைப்பாளர்கள் ஆட்சியரிடம் மனு
வாழ்வாதாரத்தைக் காக்கக்கோரி, இயந்திர கல்லுடைக்கும் உரிமையாளர் கூட்டமைப்பினர் புதன்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
வாழ்வாதாரத்தைக் காக்கக்கோரி, இயந்திர கல்லுடைக்கும் உரிமையாளர் கூட்டமைப்பினர் புதன்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல ஊர்களில் சுமார் 500 இயந்திர கல் உடைக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், நேரடியாகவும் முறைமுகமாகவும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அரசு கல் குவாரிகள் ஏலம் விடப்படாமல் உள்ளன. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய்த் துறை அனுமதியுடன் அனைத்து ஊர்களிலும் அரசு கல்குவாரிகளை உடனடியாக ஏலம் விட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.