FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்து ஈரானுடன் பாகிஸ்தான் பேச்சு!

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்து ஈரானுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தியது பற்றி...

ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி - பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் - கோப்புப் படம்
பகிர்:

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்து ஈரானுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தியதாக செவ்வாய்க்கிழமை (ஆக. 25) தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர், அமைதி ஒப்பந்தம் இறுதியானதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருந்தபோதிலும், ஹோர்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டிய அமெரிக்கா அந்நாட்டின் மீது தாக்குதலைத் தொடர்ந்தது. இதனால், அமெரிக்கா - ஈரான் இடையே ஸ்விட்சர்லாந்தில் கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

ஆகையால், உலகளவில் எண்ணெய் வழிப்போக்குவரத்தில் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழுவதுமாக மூடியது. இதையடுத்து, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, பல்வேறு நாட்டின் தலைவர்கள் தங்களது மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இருபுறமும் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ஈரானியத் தலைவர்களுடன் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் பேச்சுவார்த்தை நடத்தியதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்வதற்காக ஆசிம் முனீர் ஒரு நாள் பயணமாக ஈரானுக்குச் சென்றார். இந்தப் பயணமானது, வளைகுடா நாடுகளில் அமைதியை நிலை நாட்டுவதை நோக்கமாகக் கொண்டதாக அந்நாட்டு ராணுவம் மேலும் குறிப்பிட்டது.

முன்னதாக, வளைகுடா நாடுகளின் வரைபடத்தில் ஹோர்முஸ் நீரிணையை வட்டமிட்டு அதை அமெரிக்காவின் ஒரு பகுதியாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

summary

It was reported on Tuesday (Aug. 25) that Pakistan held talks with Iran regarding the reopening of the Strait of Hormuz.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments