FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன்: டிரம்ப்

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன் என டொனால்ட் டிரம்ப் பேசியது பற்றி...

13 வினாடிகள் முன்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - படம்: ஏபி.
பகிர்:

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன் என அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசினார்.

தென் கரோலினாவின் மிர்டில் பீச்சில் நடைபெற்ற ஒரு பேரணியில் அமெரிக்க நேரப்படி, வெள்ளிக்கிழமை டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார்.

ஈரான் குறித்து அந்தப் பேரணியில் டிரம்ப் பேசியதாவது:

Advertisement

Advertisement

அவர்கள் (ஈரான்) அணு ஆயுதம் வைத்திருப்பதை நாம் அனுமதிக்க முடியாது. அவர்கள் அணு ஆயுதத்தை வைத்திருந்தால் நாம் மோசமான விளைவுகளைச் சந்திக்கக் கூடும். இனி அவர்களிடம் அணு ஆயுதம் இருக்காது.

ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் ஈரானியர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். அந்த ஒப்பந்தம் நமக்குத் தேவைப்படுமா என்பதே எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், நான் தற்போது ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன். அது ஒரு அமெரிக்கப் பிரதேசம்.

என்ன நடக்கப்போகிறது என்று நாம் பார்ப்போம். ஈரான் எல்லைகளையும் ஹோர்முஸ் நீரிணையையும் நாங்கள் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம் என்று டிரம்ப் தெரிவித்தார்.

முன்னதாக, உலகளவில் எண்ணெய் வழிப்போக்குவரத்தில் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழுவதுமாக மூடியது. இதையடுத்து, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, பல்வேறு நாட்டின் தலைவர்கள் தங்களது மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இருபுறமும் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்து ஈரான் - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதேவேளையில், ஹோர்முஸ் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பாக ஓமனுடனும் ஈரான் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இதனிடையே, போரை முடிவுக்குக் கொண்டு வருவதிலும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதிலும் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு, வளைகுடா நாட்டின் வரைபடத்தில் ஹோர்முஸ் நீரிணையை வட்டமிட்டு, இது அமெரிக்காவின் ஒரு பகுதி என டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Donald Trump stated that he views the Strait of Hormuz as part of the United States.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments