FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மேல்துளி கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

மேல்துளி கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாமை நீதிபதி சச்சிதானந்தம் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:


மேல்துளி கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாமை நீதிபதி சச்சிதானந்தம் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரை அடுத்த, மேல்துளி கிராமத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு, சர்வோ அறக்கட்டளை இணைந்து நடத்திய பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, சர்வோ அறக்கட்டளை நிர்வாகி கலைச்செல்வி தலைமை வகித்தார். உத்தரமேரூர் காவல் ஆய்வாளர் அமல்ராஜ், வழக்குரைஞர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட சட்டப் பணிகள் குழு இளநிலை நிர்வாக உதவியாளர் கயல்விழி வரவேற்றார். இதில், உத்தரமேரூர் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், உரிமையியல், குற்றவியல் நீதிபதியுமான சச்சிதானந்தம் சிறப்புரையாற்றினார். அவர், பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகள், பிளாஸ்டிக் ஒழிப்புக்காக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். பின்னர், பொது மக்களுக்கு சட்ட ரீதியான பிரச்னைகளுக்கு நீதிமன்றத்தை நாடி வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் இலவசமாக தீர்வு காணும் முறைகள் குறித்தும் விளக்கமளித்தார். 
தொடர்ந்து, கிராமத்தினர் சட்டரீதியான பல்வேறு பிரச்னைகள் குறித்த மனுக்களை நீதிபதியிடம் வழங்கினர். முகாமில், அரசு அலுவலர்கள், கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments