FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்: பிரிட்டன்

ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டன் கடல்சார் முகமை தெரிவித்துள்ளது பற்றி...

ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் - கோப்புப் படம்
பகிர்:

ஓமன் அருகே ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டன் கடல்சார் முகமை செவ்வாய்க்கிழமை (ஆக. 25) தெரிவித்துள்ளது.

ஓமன் அருகே ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத எரிபொருள் ஒன்று கப்பலைத் தாக்கியதில் கப்பல் சேதமடைந்தது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று அந்த என்ணெய்க்கப்பலின் கேப்டன் கூறியதாக பிரிட்டன் கடல்சார் முகமை அறிவித்துள்ளது.

ஓமனில் உள்ள அஷ் ஷிஷாவிற்கு வடகிழக்கே 16.7 கிலோமீட்டர் தொலைவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அது மேலும் தெரிவித்தது. ஆனால், தாக்குதலுக்குள்ளான கப்பல் எந்த நாட்டைச் சார்ந்தது? அதன் பெயர் என்ன? போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Advertisement

Advertisement

கடந்த பிப் 28 ஆம் தேதி ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தொடங்கியது முதலே ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. முடக்கியது மட்டுமல்லாமல், அந்த வழியே பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. ஆனால் இந்தத் தாக்குதலை ஈரான் நடத்தியதாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

மத்திய கிழக்குப் போர் ஆறாவது மாதத்தை நெருங்கிய நிலையில், ஈரானை வலுவிழக்கச் செய்வதற்காக, அதன் மீது கடுமையான பொருளாதார நெருக்கடிகளை அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

A British maritime agency stated on Tuesday (Aug. 25) that an oil tanker was attacked in the Strait of Hormuz, near Oman.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments