வேளாண் இடுபொருள் விநியோகஸ்தர்களுக்கு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
ஓராண்டு வேளாண் விரிவாக்க பட்டயப் படிப்பை நிறைவு செய்த 40 வேளாண் இடுபொருள் விநியோகஸ்தர்களுக்கு ஆட்சியர் பா.பொன்னையா புதன்கிழமை சான்றிதழ் வழங்கினார்.
ஓராண்டு வேளாண் விரிவாக்க பட்டயப் படிப்பை நிறைவு செய்த 40 வேளாண் இடுபொருள் விநியோகஸ்தர்களுக்கு ஆட்சியர் பா.பொன்னையா புதன்கிழமை சான்றிதழ் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துறை சார்பில் வேளாண் கருத்தரங்கம், கண்காட்சி, வேளாண் விரிவாக்க பட்டயப் படிப்பை நிறைவு செய்த இடுபொருள் விநியோகிஸ்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஆகியன காஞ்சிபுரம் நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு, ஆட்சியர் ப.பொன்னையா தலைமை வகித்தார். விழாவில் கருத்தரங்கு, கண்காட்சியை தொடங்கி வைத்து, 40 வேளாண் இடுபொருள் விநியோகிஸ்தர்களுக்கு பட்டயப் படிப்புச் சான்றிதழ் வழங்கி
ஆட்சியர் பேசியது:
தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், பயறு வகை பயிர்களுக்கு விதைமானியம், நுண்ணூட்ட உரம், உயிர் உரம், சுழல்கலப்பை, வரப்பில் பயிரிடப்படும் பயறுகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
சிறப்புத் திட்டமான எண்ணெய் பனை சாகுபடி திட்டத்தில் கன்றுகளுக்கு பம்புசெட்டு, ஆழ்துளைக் கிணறு, உபகரணங்களுக்கு மானியம் ஆகியவை வழங்கப்படுகின்றன. பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் அனைத்து பயிர்களுக்கும் சொட்டு நீர் பாசனம், தெளிப்பான், மழைதூவான் ஆகியவற்றுக்காக சிறு, குறு விவசாயிகளுக்கு நூறு சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.
விவசாயிகளை இழப்பீட்டிலிருந்து பாதுகாக்கும் வகையில் மூன்று பருவங்களிலும் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர்களை காப்பீடு செய்யவழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தோட்டக்கலைத் துறையிலும் வீரிய ஒட்டு காய்கறிகள், பழச்செடிகன்றுகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. வேளாண் பொறியியல் துறையில் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் வேளாண் கருவிகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன.
விவசாயிகளுக்கு தேவையான பயிர் பாதுகாப்பு மருந்துகள், உரங்கள், விதைகள் ஆகியவற்றை இடுபொருள் விநியோகஸ்தர்கள் வழங்கி வருகின்றனர். இதனால், விநியோகஸ்தர்கள் அடிப்படை விவசாய அறிவுடன் செயல்படும் பட்சத்தில், முழு பங்களிப்பை அளிக்கமுடியும்.
அதனால், ஓராண்டு வேளாண் விரிவாக்க பட்டயப் படிப்பு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. முதல் அணி நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் படிப்பை நிறைவு செய்துள்ளது. அப்படி நிறைவு செய்த இடுபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
விழாவில், ரபி பருவப் பயிர்கள் சாகுபடி கையேட்டை ஆட்சியர் வெளியிட்டார். காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, மாநில வேளாண்மை விரிவாக்க மைய இயக்குநர் சங்கரலிங்கம், வேளாண்மை இணை இயக்குநர் கோல்டி பிரேமாவதி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.