FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

இருங்காட்டுக்கோட்டை பகுதியில் கார் உதிரிபாகம் பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்டதை

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

இருங்காட்டுக்கோட்டை பகுதியில் கார் உதிரிபாகம் பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்டதை தொடர்ந்து, தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தங்களுக்கு பணி வழங்க வலியுறுத்தி புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் கார் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் டாங்ஸன் எனும் தனியார் தொழிற்சாலை இயங்கி வந்தது. இத்தொழிற்சாலையில், 140 நிரந்தரத் தொழிலாளர்களும், 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில், இத்தொழிற்சாலை நிர்வாகத்தினர், முன்னறிவிப்பு ஏதும் இன்றி கடந்த ஏப்ரல் மாதம் தொழிற்சாலையை மூடியதாகக் கூறப்படுகிறது. இதனால் இத்தொழிற்சாலையில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வந்த 120 நிரந்தரத் தொழிலாளர்கள் தற்போது வேலையின்றி உள்ளனர்.
இந்நிலையில், முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வேலையிழந்த தொழிலாளர்களுக்கு, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான பிற தொழிற்சாலைகளில், வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சிஐடியு சார்பில், ஊழியர்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருங்காட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் முத்துகுமார் போராட்டத்தை தொடங்கி வைத்து, கண்டன உரையாற்றினார். இதில் வேலையிழந்த தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments