FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாணவர்களுக்கு ராணுவ வீரர் தேர்வுக்கான விளக்கம்

செங்கல்பட்டு பரி.கொலம்பா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவத்தினர் மாணவர்களுக்கு ராணுவப்பயிற்சி அளித்தனர். 

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:


செங்கல்பட்டு பரி.கொலம்பா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவத்தினர் மாணவர்களுக்கு ராணுவப்பயிற்சி அளித்தனர். 
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் எடின்பரோ தலைமை வகித்தார். ஆசிரியர் சங்க செயலாளர் ஜெரால்டு கிறிஸ்டோபர் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ அதிகாரிகள் சேகர், ஸ்ரீபாதராஜன், சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். 
ஆசிரியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, ராணுவ வீரர்களாவது எப்படி?' என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் ராணுவத்தினர் பயிற்சிகளை அளித்தனர். பயிற்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
நிகழ்ச்சி முடிவில் மாணவர் படை அலுவலர் ஆமோஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். 
இதேபோல், புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சகோதரி நிர்மலா தலைமையில் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை கெளரவித்தார். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments