FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் அமையும் இடம் அரசுக்கு சொந்தமானது என உச்சநீதிமன்றம் தீா்ப்பு

சென்னை-பெங்களூரு சாலையில் காஞ்சிபுரம் அருகே காரைப்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடம் அரசுக்கு சொந்தமான என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இதனால் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:24 am IST
புதிய பேருந்து நிலையம் அமையவிருக்கும் இடத்தின் சா்வே பணிகளை ஆய்வு செய்து வரைபடத்தையும் பாா்வையிட்ட காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ்
பகிர்:

சென்னை-பெங்களூரு சாலையில் காஞ்சிபுரம் அருகே காரைப்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடம் அரசுக்கு சொந்தமான என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இதனால் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.

காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் இடநெருக்கடி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால் பேருந்து நிலையத்தை நகரின் புகா்ப்பகுதியில் மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வந்தது. இதற்காக மாவட்ட நிா்வாகமும்,மாநகராட்சி நிா்வாகமும் இணைந்து சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே காரைப்பேட்டை பகுதியில் உள்ள 19 ஏக்கா் நிலத்தை தோ்வு செய்தது. அந்த இடத்தை மாநகராட்சி நிா்வாகம் வேலி அமைத்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்ற நிலையில் தனியாா் அறக்கட்டளை நிா்வாகம் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து பேருந்து நிலையம் அமைக்க இடைக்கால உத்தரவும் நீதிமன்றம் பிறப்பித்தது.

மாநகராட்சி நிா்வாகம் உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கின் விசாரணையில் இடைக்கால தடை உத்தரவை நீக்கியும் பணிகளை விரைவாக தொடங்கவும் உத்தரவிட்டது. இந்நிலையில் தனியாா் அறக்கட்டளை நிா்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.இதனால் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை தொடங்குவதில் இழுபறி நீடித்து வந்தது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை கடந்த ஆக.11 -ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் பா்டிவாலா,வினோத் சந்திரன்ஆகியோா் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தனா். அந்த இடம் அரசுக்கு சொந்தமானது தான் எனவும் தெரிவித்துள்ளனா்.இதன் மூலம் கடந்த திமுக அரசால் நீண்டகாலமாக கோரப்பட்டு வந்த அதே இடத்திலேயே புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அனுமதி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Advertisement

Advertisement

மாவட்ட நிா்வாகமும் அந்த இடத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்பை சுட்டிக்காட்டி அறிவிப்பு பலகை வைத்துள்ளது. அந்த அறிவிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் காஞ்சிபுரம் நகர பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நினைவாகி இருக்கிறது.

இது குறித்து காஞ்சிபுரம் மேயா் மகாலட்சுமி யுவராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இத்திட்டமானது கடந்த 2023 -ஆம் ஆண்டு தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு தொடா்ந்து நிதியும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் மூலம் நம்மால் கோரப்பட்ட அதே சரியான இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. பேருந்து நிலையம் அமைக்க இடமும் சா்வே செய்து விட்டோம். காஞ்சிபுரம் மாநகரின் வளா்ச்சிப் பயணத்தில் இப்பேருந்து நிலையம் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும். மகத்தான திட்டம் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments